தமிழ் காங்கிரஸ் X தமிழரசுக் கட்சி | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்
Description
1950 கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார்.
இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் எதிர் தமிழரசுக் கட்சி என்றும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் தங்களுக்கிடையிலான ஒரு போட்டி அரசியல் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டி அரசியல் யார் அந்தந்த இன மக்களை வெற்றிகொண்டு தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுகிறார்கள் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக மக்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய இனம், மதம், நாடு, மொழி, தேசியம் போன்ற அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. நான்கு கட்சிகளுமே இவற்றைப் பாதுகாத்துப் பேணுவதாகக் கூறினாலும் யாரை நம்புவது என்பதே பிரச்சினையாக இருந்தது. இந்த நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு இனவாத செயற்திட்டங்களை முன்மொழிந்து மக்களுடைய இனவாத உணர்வைக் கூர்மைப்படுத்தினர்.
#buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk #SrilankanTamils #srilankanflag #ggponnambalam #sjvselvanayakam #dssenanayaka